யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது.
மானிப்பாய், ஊர்காவற்துறை போன்ற தேர்தல் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி இரண்டாம் இடத்துக்கு தற்போதைய நிலைவரப்படி பின்தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, சுயேச்சையாக போட்டியிட்ட ஊசி அணிக்கும் கணிசமானளவு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.