பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
102,958 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
36,450 வாக்குகளைப் பெற்ற சிலிண்டர் அணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
பதுளை மாவட்டத்தில் தமிழ் எம்.பிக்களாக இருந்த வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
அதேவேளை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் அநுர அலையே ஏற்பட்டுள்ளது.