அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி அமையவுள்ள நிலையில், பீஜிங்குக்கும், வாஷிங்டனுக்கும் இடையில் வர்த்தக போர் வெடிக்கும் என அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் இது விடயம் சம்பந்தமாக கன்பரா கழுகுப் பார்வை செலுத்தியுள்ளது.
சீன பொருட்கள்மீது அமெரிக்கா வரி விதிக்க தயாராகிவரும் நிலையிலேயே வர்த்தக போர் மூளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பெருவில் நடைபெறும் ஆசிய, பசுபிக் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள சீன ஜனாதிபதி, உலக தலைவர்களுடனான சந்திப்பை தவிர்த்துள்ளார்.
அவர் இரு தரப்பு சந்திப்புகளில் பங்கேற்கவில்லை என்பது தொடர்பில் தெளிவான அறிவிப்பு எதுவும் பீஜிங் தரப்பில் இருந்து இன்னும் விடுக்கப்படவில்லை.
எனினும், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் வர்த்தக போர் வெடிப்பதை தடுக்க ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு ஒரு நடுத்தர சக்தியாக பயன்படுத்தப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.