இலங்கையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள்வதற்குரிய 23 பேரடங்கிய அமைச்சரவையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (18) பெயரிடவுள்ளார்.
நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன ஜனாதிபதி வசம் இருக்கும் என தெரியவருகின்றது.
பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளதுடன், விஜித ஹேரத்திடம் வெளிவிவகார அமைச்சு பதவி மீண்டும் ஒப்படைக்கப்படவுள்ளது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான சரோஜா போல்ராஜ், அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் செவ்வாய்க்கிழமை (19) நடைபெறவுள்ளது.
சபாநாயகராக பிமல் ரத்னாயக்க நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியானாலும் அவருக்கு சபை முதல்வர் பதவி வழங்கப்படுவதற்குரிய சாத்தியமே அதிகம் எனக் கூறப்படுகின்றது. பிரதி சபாநாயகர் பதவி சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது.