இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய பிறகு, எத்தனை பாலஸ்தீனர்களின் விசாக்கள் மறுக்கப்பட்ட என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க பிரதமர் Anthony Albanese மறுத்துவிட்டார்.
நாடாளுமன்றம் இன்று கூடியவேளை, கேள்விநேரத்தின்போது விசா மறுப்பு விவகாரம் தொடர்பில் பிரதமரிடம் பலரும் கேள்விகளை எழுப்பினர்.
2 ஆயிரத்து 900 விசாக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் மறுக்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை எவ்வளவு என நிழல் குடிவரவு அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
“ பாதுகாப்பு அமைப்புகள் தமது பணிகளை முறையாக செய்துவருகின்றன.” என்று இதற்கு பிரதமர் பதிலளித்துள்ளார். எனினும், எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.
மக்கள் எங்கிருந்து வருகின்றார்கள் என்பது அல்ல, பாதுகாப்பே முக்கியத்துவம் பெறுகின்றது எனவும் பிரதமர் Anthony Albanese சுட்டிக்காட்டியுள்ளார்.