Newcastle நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 20 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
வெட்டு காயங்களுடன் காணப்பட்ட இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
தாக்குதல் நடத்தியவர் தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.