ஆஸ்திரேலியாவின் முன்னாள் மூத்த ஒலிபரப்பாளரான ஆலன் ஜோன்ஸ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பிலேயே 83 வயதான அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2001 மற்றும் 2019 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சில அநாகரீகமான செயற்பாடுகள், பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். தேடுதல் உத்தரவை பெற்ற பின்னரே பெருமளவான பொலிஸார் அவரின் வீட்டுக்கு சென்று, தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்துள்ளனர்.