ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இருந்து தமிழ் பின்னணிக்கொண்ட மிச்செல் ஆனந்தராஜா விடைபெற்றுள்ளார்.
எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் மெல்பேர்ணில் உள்ள Higgins தொகுதி நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு விடுத்திருந்தது.
2022 கூட்டாட்சி தேர்தலில் இத்தொகுதியில் லேபர் கட்சி உறுப்பினரான மிச்செல் ஆனந்தராஜா வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மிச்செல் ஆனந்தராஜாவுக்கு இன்று பிரியாவிடை வழங்கப்பட்டது. பிரியாவிடை உரையின்பொது, மிகவும் உணர்வுப்பூர்வமான வகையில் அவர் கருத்துகளை முன்வைத்துள்ளார்.
கூட்டாட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.