காசா பகுதியில் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு தமது நாட்டின் ஆதரவை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு கன்பராவில் நடைபெற்றது.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல், பொருளாதாரம், வர்த்தக பரிமாற்றம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக காசா பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் நிலை குறித்தும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
காசா பகுதியில் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு தனது நாட்டின் ஆதரவை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.