தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சிட்னி ரயில் வலையமைப்பு நான்கு நாட்களுக்கு ஸ்தம்பிக்கவுள்ளது.
இதன்படி நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுகிழமைவரை ரயில் சேவை இயங்காது என்று நியூ சவூத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.
இதனால் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் மக்கள் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை நாடியுள்ளனர்.
தொழிற்சங்கங்க பிரதிநிதிகளுக்கும், மாநில அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு தோல்வியில் முடிந்த நிலையிலேயே, தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
வியாழன் இரவு 10 மணி முதல் ஞாயிறு காலை 6 மணிவரையே சேவை பாதிக்கப்படும் எனவும், வார இறுதியில் 24 மணிநேர சேவையை இயங்கும் யோசனை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.