சிட்னி பல்கலைக்கழக மாணவியொருவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
21 வயதான குறித்த மாணவி சீனப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலத்தில் வெட்டு காயங்கள் இருந்ததால் சந்தேகத்துக்கிடமான மரணமாக கருதப்படுகின்றது. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
சீன மாணவியின் மரணம் ஆஸ்திரேலியாவில் அவர் வாழ்ந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்காக Burwood பகுதியில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் விழிப்புணர்வு கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“ ஏனைய சர்வதேச மாணவர்கள்போலவே அவளும் எதிர்பார்ப்புடன் வந்தால், ஆனால் அவரின் கதை சோகத்தில் முடிந்துள்ளது.” என பிரதேச வாசிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.