சிட்னியில் பொலிஸ் அதிகாரிமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி மேற்கு பகுதியில் இன்று அதிகாலை ஐவருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பொலிஸார் வருவதைக்கண்ட நால்வர் அங்கிருந்து வாகனமொன்றில் தப்பிச்சென்றுள்ளனர். மற்றையவர் தப்பியோடுவதற்கு முற்பட்டுள்ளார்.
20 வயதான குறித்த இளைஞனை நோக்கி பொலிஸார் சென்றனர். அவரை கைது செய்ய முற்பட்டபோது பொலிஸ் அதிகாரி ஒருவரின் மார்பு மற்றும் தோள் பகுதியில் அவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த 34 வயதான பொலிஸ் அதிகாரி உடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு உயிராபத்து இல்லை. தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றார். வாகனத்தில் தப்பியோடியவர்களிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இருவருக்கு வலை வீசப்பட்டுள்ளது.