நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை ஹெலிகாப்டரொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஹெலிகாப்டரில் இருவர் பயணித்துள்ளனர் எனவும், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றையவர் மெல்பேர்ண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.