லேபர் அரசு அறிமுகப்படுத்தவுள்ள புதிய குரவரவு சட்டத்தின் பிரகாரம் ஆஸ்திரேலியாவிலுள்ள சுமார் 80 ஆயிரம் பேர் நாடு கடத்தப்படக்கூடும் என தெரியவருகின்றது.
நேற்று நடைபெற்ற செனட் விசாரணையின்போது உள்துறை அமைச்சின் அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரஜைகள் அல்லாதவர்களை ஏற்றுக்கொள்ளும் மூன்றாம் நாடுகளுக்கு ஆஸ்திரேலியா பயணம் வழங்குவதை புதிய சட்ட ஏற்பாடு அனுமதிக்கவுள்ளது.
செல்லுபடியாகும் விசா இல்லாத 75,400 பேரும், பிரிட்ஜிங் விசா உள்ள 4,452 பெரும், குடியேற்றக் காவலில் உள்ள 986 பேரும், சமூகக் காவலில் உள்ள 195 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.
இந்த 80 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.