மெல்பேர்ண் தெற்மேற்கு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 3.40 மணியளவில் 23 வயது இளைஞன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் 9 ஆண்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.