காலநிலை விவகாரம் தொடர்பில் Newcastle துறைமுக பகுதியில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.
புதிய நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு இடமளிக்ககூடாது எனவும், நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுமே குறித்த முற்றுகைப் போராட்டம் மூன்று நாட்களாக இடம்பெற்றுவந்துள்ளது.
கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.
14 சிறார்கள் உட்பட 170 பேர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்துக்கு எதிராக தடை உத்தரவு பெறுவதற்கு மாநில அரசு கடந்த வெள்ளிக்கிழமை முற்பட்டாலும், அது கைகூடவில்லை.