கார் கொள்வனவு செய்யும் பாணியில் அதனை கடத்திச்செல்வதற்காக கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த மெல்பேர்ண் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
காரை விற்பது தொடர்பில் முகநூலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்ட இளைஞர் குறித்த காரை வாங்க வந்தவர்போல் நடித்து, கார் உரிமையாளரின் வீட்டுக்கு வந்துள்ளார்.
வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் எனக் கூற, 58 வயதான கார் உரிமையாளரும், இளைஞரும் அதில் பயணித்துள்ளனர்.
பாதி தூரம் சென்றதும், குறித்த இளைஞனுக்கு வாகனத்தை செலுத்துவதற்கு உரிமையாளர் இடமளித்துள்ளார்.
இதனையடுத்து கத்தியைக்காட்டி மிரட்டி, காரில் இருந்து இறங்குமாறு அச்சுறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிக்கவே, அவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.