ஆஸ்திரேலியாவில் கடந்துள்ள 10 மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துகளால் ஆயிரத்துக்கு மேற்பட்டோபர் பலியாகியுள்ளனர்.
அடுத்த மாதம் பண்டிகை காலம் வருவதால் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துகளில் வருடமொன்றில் அதிகமானோர் இவ்வருடமே உயிரிழந்துள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும், சனத்தொகை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இறப்பு வீதம் குறைந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.
2024 இல் ஜனவரி முதல் ஒக்டோபர்வரை வீதி விபத்துகளால் ஆயிரத்து 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளால் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டு காலப்பகுதிக்குள் உயிரிழந்துள்ளனர்.