செனட்டர் Pauline Hanson மீது காகித துண்டுகளை வீசி, சபையில் முறையற்ற விவாதத்தில் நடத்துகொண்டார் எனக் கூறப்படும் சுயாதீன செனட்டர், செனட் சபையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கான பிரேரணையை லேபர் கட்சியின் மூத்த உறுப்பினரான வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் சபையில் முன்வைத்தார்.
பிரேரணைக்கு ஆதரவாக 46 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன. கிறீன்ஸ் கட்சி செனட்டர்கள் மாத்திரமே எதிராக வாக்களித்தனர்.
சுயாதீன செனட்டர் Lidia Thorpe தொடர்ந்து முறையற்ற விதத்தில் நடந்துவருகின்றார் என்று விவாதத்தில் உரையாற்றிய செனட்டர் பெனி வோங் சுட்டிக்காட்டியுள்ளார்.
செனட்டர் பாத்தீமா பேமனின் குடியுரிமை தொடர்பில் Pauline Hanson கேள்வி எழுப்பி இருந்தார். இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் சபையில் இருக்கமுடியாது எனவும் வாதிட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்த பாத்திமா பேமன், செனட்டர் Pauline Hanson ஐ இனவாதியென விமர்சித்தார்.
அவ்வேளையிலேயே பேமனுக்கு ஆதரவாக செனட்டர் Lidia Thorpe களமிறங்கியுள்ளார். இதன்போதே குற்றச்சாட்டை முன்வைத்த Pauline Hanson மீது காகிதம் வீசப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.