பாம்பு தீண்டியதால் 16 வயது சிறுவனொருவர் உயிரிழந்த பெருந்துயர் சம்பவமொன்று குயின்ஸ்லாந்து பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பியூ ஹொரன் என்ற சிறுவனே நேற்று மதியம் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
வீட்டுக்குள் வந்து மயங்கி விழுந்த பின்னரே அவரை பாம்பு தீண்டியுள்ளது என தெரியவந்துள்ளது. அதுவரை தன்னை பாம்பு தீண்டியுள்ளது என்பதை சிறுவன் உணர்ந்திருக்கவில்லை என தெரியவருகின்றது.
வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
eastern brown எனும் கொடிய நச்சு பாம்பே அவரை தீண்டியுள்ளது. உலகின் இரண்டாவது கொடிய நச்சு பாம்பு இனமாக இது கருதப்படுகின்றது.