மெல்பேர்ண் பேசைட் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆணொருவரும், பெண்ணும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவிலேயே பொலிஸாரால் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர்கள் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
இவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இது கொலைச் சம்பவமா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.