அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக லிபரல் கட்சியின் செனட் தலைவர் Simon Birmingham இன்று அறிவித்துள்ளார்.
நிழல் வெளிவிவகார அமைச்சராக செயற்படும் அவர், அடுத்த கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டார்.
கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.
Simon Birmingham 2007 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அரசியல் பயணத்தை தொடர்ந்தார். கூட்டணி ஆட்சியின்போது அவர் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.