ஐ.நா. தீர்மானமொன்றை அடிப்படையாகக்கொண்டு தைவானை தனது நாட்டில் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடும் சீனாவின் முயற்சியைக் கண்டித்து ஆஸ்திரேலிய செனட் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை கன்பராவிலுள்ள தைவான் தூதுரகம் வரவேற்றுள்ளது. எனினும், இதற்கு சீனா கடும் எதிர்ப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தைவானுடன் ஆஸ்திரேலியா இராஜதந்திர உறுவுகளைப் பேணிவருகின்றது. அந்நாட்டின் இறைமையை ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.
அத்துடன், தைவான்மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்தும் கன்பரா அதிருப்தி வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.