சிட்னி மேற்கு பகுதியில் கேம்பிரிட்ஜ் பூங்காவிலுள்ள கடையொன்றிலிருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 31 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இருவரையும் அவர் கொலை செய்துள்ளார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
69 வயது ஆணும், 68 வயது பெண்ணும் நேற்று கடைக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் தம்பதியினர் என தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே ஆலன் சியெம் எனும் 31 வயது இளைஞர் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொல்லப்பட்டவர்களின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது.
பரமட்டா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.