விக்டோரியாவின் மார்னிங்டன் தீபகற்ப பகுதியில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆணொருவரும், பெண்ணுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் என்று விக்டோரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட குறித்த இருவருக்கும் அவசர சேவை பிரிவினர் முதலுதவி அளித்தாலும், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
வீடொன்றில் வைத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன்பின்னரே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றவரை கண்டறிவதற்குரிய தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.