சிட்னி புறநகர் பகுதியில் பொலிஸ் கார்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, பொலிஸ் அதிகாரிமீது காரி உமிழ்ந்தார் எனக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி ஜோர்ஜ் வீதி பகுதியிலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் 40 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்வதற்கு முற்பட்டவேளை அவர் பொலிஸ் அதிகாரிமீது காரி உமிழ்ந்துள்ளார்.
குறித்த நபர் இன்று நீPதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.