கன்பரா பல்கலைக்கழகத்துக்கு இடைக்கால துணைவேந்தராக நியமிக்கப்பட்ட, ஸ்டீபன் பார்க்கர் அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பல்கலைக்கழக கவுன்சில்மீது நம்பிக்கை இன்மை காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
பல்கலைக்கழகம் எதிர்நோக்கியிருந்த கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் 2025 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காகவே பேராசிரியர் ஸ்டீபன் பார்க்கர், செப்டம்பர் மாதம் இடைக்கால துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
குறித்த வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையிலேயே அவர் பதவி துறந்துள்ளார்.