தொழில்நுட்ப உதவியுடன் மாற்றியமைக்கப்பட்ட ஆபாச படங்களை வெளியிடுவதை குற்றமாக்கும் சட்டமூலத்துக்கு செனட் சபையில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இவ்வாறான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆறு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்களை பயன்படுத்தி போலி படங்களை தயாரிப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் இது முன்னேற்றகரமான ஏற்பாடு என்று சட்டம் நிறைவேற்றப்பட்டதை பல தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
இதற்கு நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.