கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் தாய்லாந்தின் தென்பகுதியில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில நாள்களில் தென்தாய்லாந்தில் கனமழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் துயர்துடைப்பு முகாம்களில் தொடர்ந்து தங்கி வருகின்றனர்.
நவம்பர் 22ஆம் திகதியில் இருந்து தென்தாய்லாந்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதனால் கிட்டத்தட்ட 664,170 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் பேரிடர் தடுப்பு, நிர்வாகத்துறை தெரிவித்தது.
அதேவேளை, தாய்லாந்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக 5 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
ஐ.நா. மனிதாபிமான நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு உதவி அமைப்புகளுக்கு மேற்படி நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.