டாஸ்மேனியாவில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தினார் எனக் கூறப்படும் நபரொருவர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆயுதத்தை கைவிடுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும், அதற்கு அவர் இணங்காததாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் முதல்கட்ட எச்சரிக்கையாக பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்தினாலும் அந்நபர் முன்னோக்கி வந்துள்ளார். இதனையடுத்தே அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டாலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
சம்பவ இடத்தில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏனையோருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.