பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆஸ்திரேலியா ஆதரவாக வாக்களித்துள்ளது.
மத்திய கிழக்கு விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகுமுறைகளுடன் ஆஸ்திரேலியா முரண்படுகின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது எனக் கூறப்படுகின்றது.
குறித்த தீர்மானத்துக்கு 157 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட எட்டு நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை, சுதந்திர நாட்டுக்கான உரிமை என்பவற்றை ஐ.நா. தீர்மானம் ஆதரிப்பதுடன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பகுதிகளில் தனது சட்டவிரோத இருப்பை இஸ்ரேல் விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, ஐநாவின் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆஸ்திரேலியா ஆதரித்ததை லிபரல் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.