மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
இரு வாகனங்கள் மோதியதிலேயே இன்று மதியம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி சுரங்களில் ஒரு மாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும். கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார்.
தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததை தொழில் அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று உறுதிப்படுத்தினார். விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.