சிட்னி மேற்கு பகுதியில் சுகாதார அதிகாரிகளை கத்தியைக்காட்டி அச்சுறுத்தினார் எனக் கூறப்படும் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவசர சேவை பிரிவினர் வீடொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கமைய ஆம்புலன்ஸில் இரு துணை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றிருந்தனர்.
அங்கு பெண்ணொருவரை கத்தியைக்காட்டி இருவரையும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இரவு 11 மணியளவில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆயுதம் ஏந்தியமை, சுகாதார ஊழியர்களை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
50 வயதான அப்பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.