2025 மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் அரசுக்கான வெற்றிவாய்ப்பு குறைவு என்பதை பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களால் லேபர் கட்சி மீண்டும் அரியணையேறுவது கேள்விக்குறியாகியுள்ள நிலையிலேயே, ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், தோல்விக்கான சாத்தியம் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை லேபர் கட்சி பெறாவிட்டால் கட்சி தலைவரான தற்போதைய பிரதமர் அந்தோனி அஸ்பானிஸீ பதவி விலக வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது பற்றி எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பொருளாளர்,
' லேபர் அரசு வெற்றிபெற்றால் பிரதமர் பதவியில் அல்பானீஸி தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு." என்று பதிலளித்தார்.