வெள்ளை வேனில் மாணவர்களை கடத்த முற்பட்ட நால்வரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மெல்பேர்ண் புறநகர் பகுதியில் 10 முதல் 15 வயதுகளுக்கு இடைப்பட்ட நான்கு மாணவர்களை, வெள்ளை வேனில் வந்த ஆண்கள் அணுகியுள்ளனர்.
எனினும், குறித்த நபர்களிடம் சிக்காமல் மாணவர்கள் தப்பியுள்ளனர்.
வெள்ளை வேன் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர் எவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களை கண்டறிவதற்குரிய விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
மேற்படி சம்பவங்களையடுத்து பாடசாலைகளை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேவேளை, எவரேனும் அழைத்தால் வாகனத்தில் ஏற வேண்டாம் என சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பெற்றோர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.