திருடப்பட்ட காரை வேகமாக ஓட்டி மூன்று பெண்களை கொலை செய்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனுக்கு இன்று, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இளைஞர் தடுப்பு காவலில் அவர் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
குறித்த சிறுவனால் கடத்தி செல்லப்பட்ட கார் மோதியதில், மற்றுமொரு காரில் பயணித்த நால்வரில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
குயின்ஸ்லாந்து கடற்கரை பகுதியிலேயே கடந்த வருடம் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. 13 வயது சிறுவன் ஒருவரே விபத்தை ஏற்படுத்தி இருந்தார்.