இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் ஆஸ்திரேலியாமீது இஸ்ரேல் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்துக்கு அமெரிக்கா உட்பட எட்டு நாடுகள் எதிராக வாக்களித்திருந்தாலும், ஆஸ்திரேலியா உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
இந்நிலையில் குறித்த தீர்மானம் யூத எதிர்ப்பு நடவடிக்கையாகும் எனவும், இதனை ஆஸ்திரேலியா ஆதரித்தமை கவலையளிக்கின்றது எனவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும், இஸ்ரேலுக்கான ஆதரவில் ஆஸ்திரேலிய நிலைப்பாடு மாறவில்லை எனவும், இரு நாடுகள் தீர்வு முன்மொழிவை ஆதரிக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே வாக்களிக்கப்பட்டது எனவும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சட் மார்லெஸ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தீர்மானம் யூத எதிர்ப்பை தூண்டும் என இஸ்ரேல் பிரதமரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.