நபரொருவரை படுகொலை செய்துவிட்டு தீ வைத்து கொளுத்தினார் எனக் கூறப்படும் Newcastle பகுதியைச் சேர்ந்த நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 வயதான என்ற நபருக்கே உயர்நீதிமன்றத்தால் இன்று மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஜுலை 26 ஆம் திகதியே குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டே குறித்த நபரை எரித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கொலையாளிக்கு 7 ஆண்டுகள் பிணை இல்லாத 11 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2029 ஆம் ஆண்டு அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.