கொடூரமான ஒக்டோபர் 07 தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா நிற்பதாகவும், யூத எதிர்ப்புகளை முறியடிக்க காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் லேபர் அரசின் அமைச்சர் முர்ரே வாட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், ஐ.நாவில் ஆஸ்திரேலியா எடுத்த தீர்மானம் சரியானது எனவும், அது யூத எதிர்ப்பை ஊக்குவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மெல்பேர்ண் யூதவழிபாட்டுதலம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும், விசாரணைகள் தொடர்கின்றன எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.