நியூ சவூத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களிலுள்ள யூத வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சில இடங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
மெல்பேர்ணில் யூத வழிபாட்டுதலம்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து யூத எதிர்ப்பு நடவடிக்கையை ஆஸ்திரேலியா ஊக்குவிக்கின்றது என இஸ்ரேல் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், யூத வழிபாட்டுதலம்மீதான தாக்குதலை இதனுடன் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டுள்ள விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் இஸ்ரேல் ஜனாதிபதியுடன், ஆஸ்திரேலிய பிரதமர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். பெடரல் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புடனும் இது தொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளார்.