வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் அவர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உக்ரைன் பிஷப் மைகோலா பைச்சோக்கை 44 வயதில் உலகின் இளைய கார்டினலாக (cardinal ) ஆக
தெரிவு செய்தார்.
44 வயதில், கார்டினல் பைச்சோக், ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த கத்தோலிக்கரான கார்டினல்கள் கல்லூரியின் இளைய உறுப்பினராகவும், சர்ச்சைக்குரிய கார்டினல் ஜார்ஜ் பெல் இறந்த பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு கார்டினல்களில் ஒருவர்,
மைகோலா பைசோக் மேற்கு உக்ரைனில் உள்ள டெர்னிபோலில் பிறந்து வளர்ந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மெல்போர்னுக்கு குடிபெயர்ந்தார், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி பெறுவார் என்று தெரிய வருகிறது.
கார்டினல் பைச்சோக் 80 வயதிற்குட்பட்டவர் என்பதால், வருங்கால போப்களைத் தேர்ந்தெடுக்க போப்பாண்டவர் மாநாட்டில் வாக்களிக்க தகுதி பெறுவார்.
மெல்போர்னில், கார்டினல் பைச்சோக்கின் தேவாலயத்தில் உள்ள பாரிஷனர்கள் அவரின் நியமனம் குறித்து ஆச்சரியமடைந்ததாகவும், ஆனால் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
"அவர் மிகவும் இளம் பிஷப் என்று நாங்கள் நினைத்தோம், இப்போது அவர் மிகவும் இளம் கார்டினல் ஆகப் போகிறார், இது தேவாலயத்திற்கு அற்புதமானது." என்கின்றனர்பாரிஷனர்கள்.
சபா.தயாபரன்.