லேபர் கட்சியின் பெடரல் நாடாளுமன்ற உறுப்பினரான Graham Perrett, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர், எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆளுமை என பன்முகத்தன்மைகளைக் கொண்ட Graham Perrett, அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார்.
“ 20 ஆண்டுகள் அரசியல் களத்தில் ஓடிவிட்டேன், எனவே, வாய்ப்பை இளைஞர் ஒருவருக்கு வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் Graham Perrett தெரிவித்தார்.
பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக மிகவும் சிறப்பாக செயற்பட்ட அரசியல்வாதியாக Graham Perrett கருதப்படுகின்றார்.