மெல்பேர்ணில் யூத வழிபாட்டுதலம்மீதான தீ வைப்பு தாக்குதல் பயங்கரவாத செயலென பிரதமர் அந்தோனி அல்பானீஸி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளுக்காக விக்டோரிய மாநில பொலிஸாரை, பெடரல் பொலிஸார் நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
யூதவழிபாட்டு தலம்மீதான தாக்குதல் பயங்கரவாத செயல் எனவும், அதனை வெளிப்படையாகக் கூறுவதற்கு பிரதமருக்கு தைரியம் இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் வலியுறுத்தி இருந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை, விக்டோரியா மற்றும் நியூ சவூத் வேல்ஸ் மாநிலங்களிலுள்ள யூத தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.