மெல்பேர்ண் கரோலின் ஸ்பிரிங்ஸில் நடத்த கத்திக்குத்து தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
ஷாப்பிங் சென்டருக்கு வெளிப்பகுதியிலேயே நேற்றிரவு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதலில் 18 வயது இளைஞர் ஒருவரை அணுகிய கும்பலொன்று அவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் 22 வயது இளைஞர் ஒருவர்மீதும் குறித்த கும்பல், கத்திக்குத்துதாக்குதல் நடத்திவிட்டு அவரின் தொலைபேசியை களவாடியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.