தமது நாட்டுக்கு மிகவும் அருகிலுள்ள குட்டி தீவு நாடான நவூருடன், புதிய ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கைச்சாத்திட்டுள்ளது.
நவூரு தீவுக்கு, ஏனைய நாடுகள் பாதுகாப்பு உதவியை வழங்குவதை குறித்த ஒப்பந்தம் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பசுபிக் பிராந்தியத்தில் காலூன்றுவதற்கு சீனா முயற்சித்துவரும் நிலையில் அதற்கு கடிவாளம் போடும் நகர்வாகவும் குறித்த ஒப்பந்தம் பார்க்கப்படுகின்றது.
புதிய ஒப்பந்தத்தில் பிரகாரம் நவூரு நாட்டுக்கு கூடுதல் உதவிகளை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.