சிட்னி தென்மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெல்மோர் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தே 30 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப வன்முறையால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அந்த கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் 35 வயது நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.