யூத எதிர்ப்பு போக்கும், தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளதால் யூத சமூகத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் ஆஸ்திரேலிய பொலிஸார் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர்.
சிட்னி புறநகர் பகுதியில் இன்று காலை இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்கள் பொதுவெளியில் எழுதப்பட்டுள்ளன.
'கில் இஸ்ரேல்" என்ற சொற்பதம் எழுத்து பிழையுடன் எழுதப்பட்டிருந்தது.
அத்துடன், திருடப்பட்ட காரொன்று மேக்னி தெருவில் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
சிட்னியில் யூதர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ள சம்பவங்களை பிரதமர் அந்தோனீ அல்பானிஸி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பிரீமியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.