சிட்னி யூத அருங்காட்சியகத்துக்கு 8 மில்லியன் டொலர்களை அல்பானீஸி அரசாங்கம் வழங்கவுள்ளது.
குறித்த அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதற்காகவே நிதி உதவி வழங்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவித்தல் பிரதமரால் இன்று வெளியிடப்பட்டது.
அத்துடன், யூத சமூகத்தை இலக்காகக்கொண்ட வன்முறைச் சம்பவங்களை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், அத்தகைய சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகளாகவே அமையும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.