வழிபாட்டு தலங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கும் யோசனையை கூட்டாட்சி அரசாங்கம் ஆதரித்துள்ளது.
குறித்த தடை யோசனை நியூ சவூத் வேல்ஸ் பிரீமியரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
யூத வழிபாட்டு தலம்மீது தீ வைப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி தடை யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்த வழிபாட்டு தலங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்கும் யோசனையை தான் ஆதரிப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று அறிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் எனவும், சமூக பிளவுக்கு இடமளிக்ககூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.