Northern Territory நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது. மாலை 6 மணியளவில் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும்.
இத்தேர்தலில் லேபர் கட்சிக்கும், Country Liberal கட்சிக்கும் இடையில்தான் இரு முனை போட்டி எதிர்பார்க்கப்படுகின்றது.
85 ஆயிரம் வரையான வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
25 ஆசனங்கள் உள்ளன. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெறுவதற்கு கட்சியொன்று 13 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும்.
தற்போது லேபர் கட்சி வசம் 14 உறுப்பினர்களும், கூட்டணி வசம் 7 உறுப்பினர்களும் உள்ளனர். நால்வர் சுயாதீனமாக செயற்படுகின்றனர். இவர்களில் மூவர் இம்முறையும் போட்டியிடுகின்றனர்.